மத மற்றும் இனவாதத்தின் அடிப்படையில் குரோதத்தை ஏற்படுத்தும் கூட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, அளுத்கமை மற்றும் தர்கா நகர் பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் வெகு விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆயிரம் பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்