ஊறுபொக்க பிரதேசத்தில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கணவனும் மனைவியும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்தில் பலாங்கொடை கொறாக்கமடு பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் அம்சா (வயது55) மற்றும் சித்தி பரீனா (வயது 48) ஆகிய தம்பதியரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர்களாவர்.
முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடையிலிருந்து ஊறுபொக்க பிரதேசத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த போதே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாறையில் மோதி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஊறுபொக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.