தன்னை சிலர் தாக்கியதாக வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் இது தவறான முறைப்பாடாகும்.
விஜித்த தேரர், தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தேரருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து அவதானிக்கும் போது அவை அவராலேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவையா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இக்காயங்கள் பாரதூரமற்றவை என்றும் தேசிய வைத்தியசாலையின் வைத்திய பிரிவு தெரிவிக்கின்றது.
பேசாமல் இருப்பதற்கோ அல்லது பேச முடியாத அளவுக்கோ அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள வைத்திய பிரிவு, அவரின் மௌனம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளது.
வைத்தியசாலையிலிருந்து வீடு செல்லக்கூடிய நிலைமையில் அவர் இருந்த போதிலும் தான் இன்னும் குணமடையவில்லை என்று கூறிக்கொண்டு வைத்தியசாலையிலேயே தங்கியிருக்க முற்படுகின்றார் என்றும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.