Monday, June 23, 2014

புத்தளம், பாலாவி விமான ஓடுதளத்தை புனரமைக்க நடவடிக்கை

புத்தளம் பாலாவி விமான ஓடுதளத்தை மீண்டும் புனரமைப்பதற்கு சிவில் விமான சேவைகள் அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

3,000 அடி நீளமுள்ள பாலாவி விமான ஓடுதளம் இலங்கையின் மிகவும் பழமையான விமான ஓடுதளமாகும் என அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி.நிமல்சிறி தெரிவித்துள்ளார்.

தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் விமான ஓடுதளத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னோடி ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கற்பிட்டி சுற்றுலா வலயம், டொல்பின் மற்றும் திமிங்கிலங்கள் செரிந்து வாழும் கடற்பிராந்தியம், வில்பத்து சரணாலயம் போன்ற இடங்களை பார்வையிடுவதற்காக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.

இந்த நிலையிலேயே புத்தளம் பாலாவி விமான ஓடுதளத்தை மீளப் புனரமைப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பு விமான ஓடுதளத்தையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
Disqus Comments