Monday, July 14, 2014

ஆயிரக் கணக்கான பலஸ்தீனர்கள் காஸாவின் வட பிராந்தியத்தில் இருந்து இடம்பெயர்வு


இஸ்ரேல் விடுத்த தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து, காஸாவின் வட பிராந்தியத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
ஹமாஸ் இயக்கம் நடத்தும் ரொக்கெட் தாக்குதல்களை நிறுத்தும் வகையில், காஸாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இஸ்ரேலின் விமானத் தாக்குதல்கள் ஆறாவது நாளாக தொடர்ந்துள்ள நிலையில் 17 ஆயிரம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை முதல் இஸ்ரேல் நடத்திவரும் விமானத் தாக்குதல்களில் குறைந்தது 172 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 260 பேர் காயமடைந்துள்ளனர்.

Disqus Comments