மதுரங்குளி - ஜெயராஜபுர பிரதேச வீடொன்றில் இன்று கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 03.00 மணி அளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. எனினும் வீட்டுக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை வீட்டு உரிமையாளருடன் முரண்பாடுள்ள ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது உள்நாட்டு கைக்குண்டா அல்லது வௌிநாட்டுக் கைக்குண்டா என இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.