Tuesday, October 21, 2014

ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில் நிச்சயம் நடக்கும். திகதி இன்னும் தீா்மானிக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருட ஜனவரியில் நடைபெறுமென நேற்று திங்கட்கிழமை(20) உறுதிப்படுத்தியுள்ள அரசாங்கம், அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லையெனவும் கூறியுள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்குமாறு கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் தேர்தலில் இன, மத வேறுபாடுகளை மறந்துவிட்டு தேசிய நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றும்  ரம்புக்வெல கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கிலேயே தமிழீழ விடுதலைப்புலிக்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதென்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்கு நாடுகளுக்கு ஒரு தலைவலியாகிவிட்டார். வேறு யாராவது ஜனாதிபதியாக இருந்தால் அவர் சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு முறையல்ல நான்கு தடவை வளைந்து நின்றிருப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Disqus Comments