இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடரை 5 இற்கு 0 என இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை அணி இவ்வாறன தோல்வியை நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தித்துள்ளது. இந்திய அணியுடன் 1983ஆம் ஆண்டு இலங்கை அணி 3 போட்டிகள் அடங்கிய தொடரின் சகல போட்டிகளிலும் தோல்வியடைந்த பின்னர் தற்போதே ஒரு தொடரின் சகல போட்டிகளிலும் தோல்வியடைந்த்துள்ளது. 91ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி முதற்தடவையாக 1 போட்டிக்கு மேற்பட்ட தொடர் ஒன்றில் சகல போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்தியா ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் அஞ்சலோ மத்தியூஸ் தனது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டிச் சதத்தைப் பெற்றுக் கொண்டார். ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். லஹிறு திரிமான்னே 52 ஓட்டங்களையும், திலகரட்ன டில்ஷான் 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தவல் குல்கர்னி 3 விக்கெட்களையும், அஷ்வின், அக்சார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் விராத் கோலி 139 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். 21 சதத்தை பெற்று கூடுதலான சதங்கள் பெற்றவர்கள் பட்டியலில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கை அணியின் பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் 4 விக்கெட்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஒரு போட்டியின் இரு தலைவர்களும் சதம் அடித்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். இரண்டு சந்தர்ப்பங்களில் விராத் கோலி சதங்களைப் பெற்றுள்ளார். போட்டியின் நாயகனாக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவான அதேவேளை போட்டி தொடர் நாயகனாக விராத் கோலி தெரிவானார்.