அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல. அவருக்கு முன்னதாக முஸ்லிம்கள்தான் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக துருக்கி ஜனாதிபதி ரீசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நடைபெற்ற இலத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார்.
அமெரிக்காவை கண்டுபிடித்தது கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று கூறுகின்றனர். உண்மை அதுவல்ல. அமெரிக்காவை 1178 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி பதிக்கும் முன்பே அந்நாட்டை முஸ்லிம்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது கொலம்பஸ் அங்கு செல்வதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னதாக 12ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடித்து இருக்கின்றனர்.
அமெரிக்கா குறித்து கொலம்பஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கியூபன் கடற்கரையில் உள்ள மலையில் ஒரு மசூதி இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் 12ஆம் நூற்றாண்டிலேயே இலத்தீன் அமெரிக்காவுக்கும், இஸ்லாமுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்று துருக்கி ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
.jpg)