874 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவா் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. தமது விதிமுறைகளை மீறி செயற்பட்ட குறித்த நிறுவனங்ளில் 769 முகவா்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவா் அமல் சேனாதிலங்கார இதில் 295 முகவா்கள் வெளிநாடுகளிலிருந்தே இயங்குவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கையா்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அன்னிச் செலாவணி மூலம் நாடு பயன்பெறுவராகவும் சுட்டிக்காட்டியுள்ள அவா்கள் வருடாந்தம் வெளிநாடுகளில் பணிபுரிவோரின் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கு வதற்காக ரூ.150 மில்லியன் அரசு செலவு செய்வதாக வும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.