Tuesday, November 11, 2014

உயர் நீதிமன்றின் பதில் ஜனாதிபதி கையில்: தீா்ப்பில் இருப்பது என்ன?


மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கான உயர் நீதிமன்ற பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

உயர் நீதிமன்றின் பதில் அலரி மாளிகைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் உறுதி செய்துள்ளார். 

எனினும் அந்த பதிலின் உள்ளடக்கம் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் வௌியாகவில்லை. 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு மூன்றாவது தடவை போட்டியிட முடியுமா இல்லையா என்பது பற்றி ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments