Tuesday, November 11, 2014

பொது வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை – சந்திரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் சந்திரிக்காவை பொது வேட்பாளராக போட்டியிடுமாறு கோரியுள்ளனர்.
எனினும், இந்தக் கோரிக்கையை சந்திரிக்கா நிராகரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர, கபீர் ஹசீம் போன்றவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இவர்கள் கோரியிருந்தனர்.
ரணில் தேர்தலில் போட்டியிட்டால் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியாது என தெளிவுபடு;த்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சந்திரிக்காவை போட்டியிடச் செய்ய சம்மதம் பெற்றுக்கொள்ளுமாறு ரணில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சந்திரிக்காவை சந்தித்து பொது வேட்பாளராக போட்டியிடுமாறு கோரியுள்ளனர்.
எனினும், இந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நிராகரித்துள்ளார்.
பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் இணைந்து நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலும் சந்திரிக்கா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments