இந்திய அணிக்கெதிராக ராஞ்சியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் பல சாதனைகள் படைத்துள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2014 ஆம் ஆண்டில் 25 போட்டிகளில் விளையாடிய மெத்தியூஸ் சதம் உட்பட 8 அரைச் சதங்களுடன் 1,062 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 139 ஓட்டங்களை விளாசிய மெத்தியூஸ், இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களை பெற்ற வெளிநாட்டு அணித்தலைவர்கள் வரிசையில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் அணித் தலைவர் ஸ்டிராஸ்-158 ஓட்டங்கள்(பெங்களூரில் இந்தியாவுக்கு எதிராக 2011ஆம் ஆண்டு), அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஜோர்ஜ் பெய்லி-156 ஓட்டங்கள் (நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு) ஆகியோர் உள்ளனர்.
நேற்றைய போட்டியில் 10 சிக்சர்களை பறக்கவிட்ட மெத்தியூஸ், ஜெயசூர்யாவுக்கு (1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 11 சிக்சருடன் 134 ஓட்டங்கள்) அடுத்து ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இலங்கை வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்
