Monday, November 17, 2014

அனைத்து ஆபாச இணையத்தளங்களுக்கு தடை - இந்தியா

இந்தியாவில் அனைத்துவித ஆபாச இணையதளங்களுக்கும் தடை விதிக்க செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்கொடுமைகளும்  அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்திய கணக்கெடுப்பில் கூட பாலின வேறுபாடுகள் அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா முதண்மையானதாக இருந்தது. இதனால் சர்வதேச அளவில் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற பிம்பம் உருவாகி வருகிறது.
எனவே இதன் ஒருகட்டமாக இணைய தளங்களில் ஆபாச வலைதளங்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம், இது போன்ற ஆபாச இணைய தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு ஆலோசணைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments