Saturday, November 8, 2014

காதலியை கடத்தி அவள் தாயிடமே கப்பம் கோரிய காதலன்

அது கடந்த 5 ஆம் திகதி புதன்­கி­ழமை பர­ப­ரப்­பாக இயங்கிக் கொண்­டி­ருந்த வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையம் சற்று வேலைப் பளு தணிந்த நிலையில் இயங்கிக் கொண்­டி­ருந்­தது. திடீ­ரென அங்கு ஒரு தம்­ப­தி­யினர் பிர­சன்­ன­மா­கின்­றனர். எதையோ பறி­கொ­டுத்த நிலைமை அவர்­க­ளது முகங்­களில் தெரி­கி­றது.

"சேர் எனது மகளைக் காண­வில்லை. யாரோ கடத்தி விட்­டார்கள்.சேர் நீங்கள் தான் எப்­ப­டி­யேனும் எனது மகளை மீட்­டுத்­தர வேண்டும்" என அழு­த­வாறு முறைப்­பாட்டை சுருக்­க­மாக கண்­ணீ­ருடன் கலந்து சொல்லி முடிப்­ப­தற்குள் பொலிஸார் உஷார் ஆகின்­றனர்.

உசா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) 17 வய­தான யுவதி. வெள்­ள­வத்தை ரஞ்சன் விஜ­ய­ரத்­ன­புர பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா, அப்பா, அக்கா, அத்தான் ஆகி­யோ­ருடன் ஒரே வீட்டில் பிரச்­சி­னைகள் இன்றி சந்­தோ­ஷ­மாக வாழ் நாளை கழித்து வந்­தவள். இவளைத்தான் இப்­போது காண­வில்லை என பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

வெள்­ள­வத்தைப் பிர­தே­சத்தில் மனிதப் படு­கொலை, கடத்தல், கப்பம் கோரல், கொள்ளை போன்ற பாரிய குற்றச் செயல்கள் அண்மைக் கால­மாக கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் இந்த முறைப்­பா­டா­னது மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யப்­பொ­றுப்­ப­தி­காரி தலைமைப் பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர் நிலை­மையின் பார தூரத்தை உணர்ந்து உடன் களத்தில் இறங்­கு­கிறார். அதன்­படி மேல் மாகா­ணத்­திற்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனா­நா­யக்க, கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி மத்­து­ரட்ட, கொழும்பு தெற்­கிற்குப் பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரே­மலால் ரன­கல ஆகி­யோரின் மேற்­பார்­வையின் கீழ் கொழும்பு பிரிவு 2ற்குப் பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டி சொய்ஸா பிரிவு 3ற்குப் பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஸான் டயஸ் ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்­க­மைய விசேட பொலிஸ் குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது.

வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி தலைமைப் பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்­லரின் நேரடி கட்­டுப்­பாட்டில் அந்த பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நாக­ஹ­வத்­தவின் தலை­மையின் கீழ் உப­பொலிஸ் பரி­சோ­தகர் விக்­ர­ம­சூ­ரிய சார்­ஜன்­க­ளான சோம­ரத்ன (5,048), ஜய­தி­லக (4,972), கான்ஸ்­ட­பிள்­க­ளான விஜே­சிங்க (72,075), சந்­த­நா­யக்க (60,252), தில­க­ரத்ன (70,963), குமார (61,891) ஆகியோர் அடங்­கிய குழு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

அதே­ச­மயம் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஸான் டி சில்­வாவின் மேற்­பார்­வையில் அந்தப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜய­ரத்­னவின் ஆலோ­ச­னையின் கீழ் மற்­றொரு குழுவும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

அதன்­படி உசா எவ்­வாறு கடத்­தப்­பட்டார்? எப்­போது யாரால் கடத்­தப்­பட்டார்? என்­பதை அறிய பொலிஸ் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

முறைப்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­த­தற்­க­மைய உசா முறைப்­பாடு பதி­யப்­பட்ட தின­மான 5ஆம் திகதி இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் கடத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும் என்ற தீர்­மா­னத்­திற்கு விசா­ர­ணைக்­கு­ழு­வினர் வரு­கின்­றனர்.

உசாவின் அம்­மாவும் அப்­பாவும் அச்­ச­மயம் வீட்டில் இருக்­க­வில்லை என்­ப­தையும் அப்­போது வீட்டில் இருந்த உசாவின் அக்கா மற்றும் அத்தான் ஆகியோர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தின் ஊடாக அறிய முடி­கின்­றது. பொலி­ஸா­ருக்கு உசாவின் அக்கா அத்தான் வழங்­கிய தக­வலில் வீட்டில் அம்­மாவும் அப்­பாவும் இருக்­க­வில்லை. உசா­வுடன் சேர்த்து நாங்கள் மூவரும் தொலைக்­காட்சி பார்த்துக் கொண்­டி­ருந்தோம். அப்­போது வீட்டில் இருந்து உசா பெரி­யம்மா வீட்­டிற்கு (100M தூரத்தில்) சென்றார். சிறிது நேரத்தில் வெளியே சென்­றி­ருந்த அம்­மாவும் அப்­பாவும் வந்­தனர். தங்கை எங்கே என அம்மா வினவ அவள் பெரி­யம்மா வீட்­டிற்கு சென்று விட்­ட­தாக நாம் பதி­ல­ளித்தோம். சிறிது நேரம் வரை காத்­தி­ருந்து பெரி­யம்மா வீட்­டிலும் தங்கை இல்லை என்­பதை விசா­ரித்து அறிந்த போது அதிர்ந்து போய் தேட ஆரம்­பித்தோம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யத்­தினை கருத்தில் கொண்ட விசா­ரணை பொலிஸ் குழு தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்­லரின் ஆலோ­ச­னை­க­ளையும் அனு­ம­தி­க­ளையும் பெற்று விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­தி­யது.

உசாவை தேடி வெள்­ள­வத்தை பொலிஸார் விசேட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில் பொலி­ஸா­ருக்கு மிக முக்­கி­ய­மான தகவல் ஒன்று பரி­மாற்­றப்­பட்­டது.

அதா­வது உசாவின் அத்தான் பொலி­ஸாரை தொடர்பு கொண்டு சேர் யாரோ தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு 20 இலட்சம் ரூபா கப்பம் கேட்­கின்­றனர். மகளை அவர் தான் கடத்தி வைத்­துள்­ளாராம் என கூறி முடிப்­ப­தற்கும் கடத்­தல்­காரர் தொடர்பில் தடயம் ஒன்று கிடைத்­ததால் விசா­ர­ணைக்­குழு உஷா­ரா­னது.

இந்த அழைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டு சிறிது நேரத்தில் தனது அம்­மாவை தனது தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட உசா "அம்மா எனக்கு பய­மாக இருக்­கின்­றது. யாரோ இங்கு என்னை கடத்தி வந்து மல­ச­ல­கூ­ட­மொன்றில் அடைத்து வைத்­துள்­ளனர். ஒன்றும் செய்ய முடி­ய­வில்லை. தாக்­கு­கின்­றனர். பய­மாக உள்­ளது. என்னை எப்­ப­டி­யேனும் காப்­பாற்­றுங்கள்" என தெரி­வித்­ததால் உசாவின் அம்மா பதற்­ற­மானார்.

இதன் பின்னர் தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட கடத்­தல்­காரர் எனக்­கூ­றப்­படும் நபர் உசாவின் அத்­தானை மீண்டும் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு மீண்டும் நாளை காலை தொடர்பு கொள்­கிறேன். பணத்தை தயார் செய்­யுங்கள் எனக்­கூ­றி­யுள்ளார்.

இந்த எல்லா விட­யங்­க­ளையும் பெற்­றுக்­கொண்ட விசா­ரணைக் குழு­வினர் உசா­வை மீட்கும் திட்­டத்­தினை ஆரம்­பித்­தனர்.

அதன்­படி வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி நாக­ஹ­வத்த தலை­மை­யி­லான 7 பேர் கொண்ட குழு திட்­ட­மொன்றை வகுத்­தது.

கடத்­தல்­காரர் கேட்கும் 20 இலட்சம் ரூபா­வினை போலி­யாக தயார் செய்து அதனை வழங்கி கப்­பக்­கா­ரரை /காரர்­களை கைது செய்­வதே அந்த திட்டம்.
இந்­நி­லையில் நேற்று முன்­தினம் விடு­முறை தின­மாக இருந்த போதும் கப்­பக்­கா­ர­ரி­ட­மி­ருந்து அழைப்பு வரத்­த­வ­ற­வில்லை.

"சொல்­வதை கவ­ன­மாக கேட்­டுக்கொள். 20 இலட்சம் ரூபா­வுடன் மத்­து­கம வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலை­யத்­துக்கு வா" என உசாவின் அத்­தா­னுக்கு கப்­பக்­காரர் இடத்தை அறி­விக்­கவே அந்த தகவல் பொலி­ஸா­ருக்கு பரி­மாற்­றப்­பட்­டது.

அதன்­படி வேன், மோட்டார் சைக்கிள் ஆகி­ய­வற்றை பெற்­றுக்­கொண்ட பொலிஸார் மத்­து­கம நகரை நோக்­கிய கப்­பக்­கா­ரர்­களை கைது செய்யும் பட­லத்தை ஆரம்­பித்­தனர்.பொலிஸ் பரி­சோ­தகர் நாக­ஹ­வத்த தலை­மையில் நான்கு பேர் வரையில் வேனில் பய­ணிக்க உப பொலிஸ் பரி­சோ­தகர் விக்­ரம ஆரிய தலை­மை­யி­லான மேலும் மூவர் மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணத்தை ஆரம்­பித்­தனர். மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த பொலி­ஸாரும் வேனில் பய­ணித்­தோரும் உசாவின் அத்­தா­னுக்கு பிரத்­தி­யே­க­மாக தொலை­பே­சியில் ஆலோ­ச­னை­களை வழங்­கிய வண்­ணமே மத்­து­க­மயை நோக்கி சென்­றனர்.

மத்­து­கம நக­ருக்குள் நுழை­வ­தற்கு முன்­ன­தா­கவே உள்ள கப்­பக்­காரர் குறிப்­பிட்ட பெற்றோல் நிரப்பும் நிலை­யத்தை உசாவின் அத்தான் அடைந்த போதும் கப்­பக்­காரர் வர­வில்லை.

தொலை­பேசி வழி­யாக ஒவ்­வொரு இட­மாக மாறி மாறி கப்­பக்­காரர் உசாவின் அத்­தானை அலை­ய­விட்­டனர். கூடவே சேர்ந்து அழக்கழிக்­கப்­பட்ட பொலி­ஸாரும் சந்­தர்ப்­பத்­துக்­காக காத்­தி­ருந்­தனர்.

ஒரு­வாறு இறு­தி­யாக உசாவின் அத்­தானின் கையி­லி­ருந்த போலி­யாக தயார் செய்­யப்­பட்ட 20 இலட்சம் ரூபா பார்­சலை பெற கப்­பக்­காரர் முனைந்த போது பொலிஸார் வேனில் பின் தொடர்­வதை அவ­தா­னித்து தப்­பிச்­செல்ல முற்­பட்­டனர்.

இந்­நி­லையில் பொலிஸார் துரி­த­மாக செயற்­பட்­டதில் வேனில் இருந்தும் மோட்டார் சைக்­கி­ளி­லி­ருந்தும் பாய்ந்த அவர்கள் சந்­தேக நபரை துரத்தி மடக்­கிப்­பி­டித்­தனர்.

சந்­தேக நபரின் கைக­ளுக்கு விலங்­கிட்ட பொலிஸார் உசா தொடர்பில் அவ­ரிடம் உடன் விசா­ரித்­தனர். இத­னை­ய­டுத்து மத்­து­கம நக­ரி­லி­ருந்து சுமார் 10 கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்பால் உள்ள ஒரு இடத்­தி­லி­ருந்து உசாவும் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்டு வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையம் அழைத்து வரப்­பட்டார்.

பொலிஸ் நிலையம் அழைத்து வந்த அவ்­வி­ரு­வ­ரையும் பொலிஸார் வெவ்­வே­றாக வைத்து நடந்­த­வற்றை வின­விய போது அவர்­களே ஒரு கணம் அதிர்ந்து போயினர்.

ஆம். இது ஒரு கடத்தல் என்­பதை விட கடத்தல் நாடகம் என்று அறிந்து கொண்ட பொலிஸார் உசாவும் கப்பம் கோரிய நிஷாந்­தவும் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) சேர்ந்தே இதனை செய்­துள்­ளதை அறிந்து கொண்­டுள்­ளனர்.

நிஷாந்­த­னுக்கு 23 வயது. அனு­ரா­த­புரம் பிர­தே­சத்தை சேர்ந்த இவர் தொழில் நிமித்தம் கொழும்பு வந்து சென்­றுள்­ளவர். தொலை­பே­சியில் மிஸ்கோல் ஒன்று ஊடாக அவ­ருக்கு அறி­மு­க­மா­ன­வரே 17 வய­தான உசா.

இந்த அறி­முகம் நாள­டைவில் காத­லாக மாறி­யுள்­ளது. இந்­நி­லை­யி­லேயே நிஷாந்­தவும் உசாவும் சேர்ந்து உசாவின் பெற்­றோ­ரிடம் 20 இலட்சம் ரூபாவை பெற்­றுக்­கொள்ள இந்த கடத்தல் நாட­கத்தை அரங்­கேற்றி உள்­ள­தாக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு சுட்­டிக்­காட்­டினார்.

தனது பெற்­றோ­ரிடம் இருந்து பணம் பறிக்க உசா நிஷாந்­த­விற்கு துணை போயுள்­ள­தாக சுட்­டிக்­காட்டும் விசா­ரணைக் குழு­வினர் நீதி­மன்றில் சந்­தேக நப­ரான நிஷாந்­தவை ஆஜர்­ப­டுத்தும் போது சமர்ப்­பிக்­க­வுள்ள Bஅறிக்­கையில் அது தொடர்பில் தெரி­யப்­ப­டுத்த உள்­ள­தாகக் குறிப்­பி­டு­கின்­றனர்.

நிஷாந்த இந்த கப்பம் கோரலை உசா­வுடன் இணைந்து தனி­யாக செய்­தி­ருக்க முடி­யாது என குறிப்­பிடும் பொலிஸார் நிஷாந்­த­வுக்கு உத­வி­யாக எவ­ரேனும் செயற்­பட்­டி­ருக்க வேண்டும் என நம்­பு­கின்­றனர். அது தொடர்­பிலும் விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்ள வெள்ளவத்தை பொலிஸார் இந்த சம்பவத்துடன் வேறு எவருக்கேனும் தொடர்பு இருப்பின் அவர்களை கைது செய்ய எதிர்பார்த்துள்ளனர்.

பெற்றோரின் இரத்தத்தை சூடேற்றி அவர்களை பதறவைக்கும் வகையில் முன் எடுக்கப்பட்டிருந்த இந்த கடத்தல் சம்பவம் அல்லது நாடகம் வெள்ளவத்தை பொலிஸாரின் சூட்சுமமான நகர்வுகளூடாக முறியடிக்கப்பட்டது.

இலங்கை முழுவதும் உள்ள 433 பொலிஸ் நிலையங்களுக்கும் உசா காணாமல் போனது முதல் அவரைத் தேடும் பணியினை வெள்ளவத்தை பொலிஸார் அறிவித்தல் ஒன்றினூடாக விடுத்திருந்தனர். எவ்வாறாயினும் மிக விரைவாக செயற்பட்ட பொலிஸார் இது விடயத்தில் உடன் நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியதே. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர், உதய குமார வுட்லர், பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளது.
Disqus Comments