Sunday, January 18, 2015

குடும்ப ஆட்சியே யுத்தவெற்றிக்கு உதவியது: நாமல்

எங்களது குடும்ப ஆட்சியே தமிழீழ விடுலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை வெற்றிகொள்ள வழிவகுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அவரது சட்ட நிறுவன அலுவலகத்தில் வைத்து இந்திய என்.டி.ரீ.விக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

தனது தந்தை மற்றும் சிறிய தந்தையான பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளே  எல்.ரீ.ரீ.ஈயினருடனான போரில் இலங்கை இராணுவம் வெற்றிபெற காரணம் எனவும் அவர் கூறினார். 

தமது குடும்பத்துக்கிடையேயுள்ள பிணைப்பே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக தெரிவித்த நாமல், எந்தவொரு தலைவருக்கும் நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு செயலாளர் ஒருவர் தேவைப்படுவார் என்றார். அத்துடன் எனது தந்தை அரசு தலைவர்களுடன் சேர்ந்து தனிப்பட்ட உறுதியான முடிவுகளை எடுக்கமுடிந்ததது. ஆனால், அந்த தலைவருக்கு உண்மையானவர்கள் தேவைப்பட்டதாகவும் நாமல் தெரிவித்தார்.
Disqus Comments