Sunday, January 18, 2015

PPAF அமைப்பின் ஏற்பாட்டில் விருதோடையில் அரசியல் விழிப்புணா்புக் கூட்டம்.

புத்தளம் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூரத்தி செய்யக்கூடிய பாராளுமன்ற பிரதிநித்துவத்தினை உறுதி செய்யும் முகமாக மக்களால் உறுவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட மக்களுக்கு பொறுப்பு சொல்லக்கூடிய ஓர் அரசியல் கலாச்சாரத்தை உறுவாக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் அரசியல் விழிப்புணர்வு மன்றம் - PPAF எனும் எமது அமைப்பு கடந்த பல மாதங்களாக அரசியல்வாதிகளையும்,பொதுமக்களையும் சந்தித்து தமது இலக்கு , நோக்கம், செயற்திட்டங்கள் போன்றவற்றினை தெளிவுபடுத்தி வருகின்றது. 

அதன் ஒரு நிகழ்வாக புத்தளம் விருதோடை பகுதியை சேர்ந்த பொது மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று  (15.01.2015) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதோடு எம்முடன் இணைந்து கொள்வதாகவும் உறுதியளித்தனர்.



Disqus Comments