Wednesday, January 21, 2015

BMICHல் கோத்தபாயவுக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சியம் சிக்கியது.


பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப பாதுகாப்புப் பொறுப்பில் ஈடுபட்டிருக்கும் முன்ளாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சொந்தமானதென அறியப்படும் ரக்னா லங்கா நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியம் பொலிசாரால் இன்று காலை திறக்கப்பட்டு பெருமளவு ஆயுதங்கள்
அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு சுமார் 85 -56 ரக துப்பாக்கிகள், ரவைகள் உட்பட பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கொழும்பு மஜிஸ்திரேட் உத்தரவின் பேரிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
SOURCE

Disqus Comments