Wednesday, January 21, 2015

ஜனாதிபதி MY3பால சிரிசேன தலைமையில் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரசின் கீழான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவிருக்கிறது. மதியம் ஒரு மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கவிருக்கும் இந்நிகழ்வு புதிய பிரதமர், அவைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவரோடு ஆரம்பமாகவுள்ளது.

மைத்ரி அணியில் தேர்தலுக்கு முன்பு இணைந்து கொண்டவர்கள் ஆளுங்கட்சி தரப்பிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கான பக்கத்தில் அமர்ந்து கொள்ளும் அதேவேளை ஐ.ம.சு.முன்னணியில் அங்கம் வகிக்கும் ஏழு கட்சிகளின் தலைவர்களும் இன்று முதல் சுயாதீனமாகவே இயங்குவார்கள் என நேற்று மாலை சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

சம்பிரதாயபூர்வமான ஆரம்பம், பிரதமரின் தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பான விளக்கம் தவிர வேறு வாத, விவாதங்கள் இன்று இடம்பெறாது என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments