Monday, February 9, 2015

14.1 இறாத்தல் நிறையுடைய இராட்சத குழந்தை அமெரிக்காவில் பிறப்பு

கர்ப்­ப­ம­டைந்து 9 மாத கால­மாகும் வரை தான் கர்ப்­ப­ம­டைந்­துள்­ளதை அறி­யாத பெண்­ணொ­ருவர் 14.1 இறாத்தல் நிறை­யு­டைய இராட்­சத குழந்­தை­யொன்றை பிர­ச­வித்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.
புளோ­ரிடா மாநி­லத்தில் டம்பா நகரைச் சேர்ந்த மக்­ஸன்ட்ரா போர்ட் என்ற பெண்ணே இவ்­வாறு இராட்­சத குழந்­தையை அந்நக­ரி­லுள்ள சென் ­ஜோசப்ஸ் பெண்கள் மருத்­து­வ­ம­னையில் பிர­ச­வித்­துள்ளார்.
கடந்த ஜன­வரி 29 ஆம் திகதி பிறந்த இந்த குழந்தை தொடர்பில் அமெ­ரிக்க ஊட­கங்கள் சனிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
இந்த குழந்­தைக்கு அவெரி என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.மக்­ஸன்­ட்ரா­வுக்கும் அவ­ரது கணவர் அலென் டென்டனுக்கும் ஏற்கனவே ஒரு வயது மகனும் 5 வயது மகளும் உள்ளனர்.
Disqus Comments