முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி ஷசி வீரவங்சவை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்ச, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட. சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அவரை, தள்ளுவண்டியில் படுத்திருந்தவாறே அவரை, ஆஜர்படுத்தியுள்ளனர்.
