Sunday, February 1, 2015

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவில்லையா ? கீழ்வரும் இலக்கத்துக்கு அழையுங்கள்

குறைக்கப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு அமைவாக கட்டணங்களை அறவிடாத பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அகில இலங்கை ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண போக்குவரத்து அதிகார சபையின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக ஆணைக்குழுவின் திட்டமிடல் பணிப்பாளர் எச்.டப்ளியூ விபுலசேன குறிப்பிட்டுள்ளார்.
011 2 59 55 55 என்ற இலக்கத்தினூடாக பஸ் கட்டணங்கள் தொடர்பான முறைப்பாடுகளைதேசிய போக்குவரத்து ஆணைனக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கு அறிவிக்க முடியும்.
புதிய பஸ் கட்டணத்திற்கு அமைய பணம் அறவிடப்படாமை தொடர்பில் இதுவரை 15முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் திட்டமிடல் பணிப்பாளர் எச்.டப்ளியூ விபுலசேன தெரிவிக்கின்றார்.
கிடைக்கும் அனைத்து முறைப்பாடுகளுக்கும் அதேநேரத்தில் விசாரணைக்குட்படுத்தி நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Disqus Comments