-எம்.எஸ்.முஸப்பிர்
கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பிரதேசத்தைச் சேர்ந்த பியுமி நிசங்சலா (வயது 6) என்ற சிறுமி பாதுகாப்பற்ற கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை மாலை வீட்டிலிருந்து காணாமல் போன இந்தச் சிறுமியை தேடியபோது, சிறுமியின் வீட்டுக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றிலிருந்து சிறுமி மீட்கப்பட்டார். உடனடியாக சிறுமியை கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.