Friday, February 6, 2015

மைத்திரியின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம்கள் உதவினார்கள். ஜனாதிபதி சந்திரக்கா

67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் ஏற்பாட்டிலான நிகழ்வொன்று நேற்று நண்பகல் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

தேசிய சூரா சபையின் தலைவர் தாரீக் மஹ்மூதின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான டாக்டர் ராஜித சேனராத்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டடு உரையாற்றினர்.  இதன் போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, முஸ்லிம் மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் புதிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும். கடந்த 2 வருடத்திற்குள் அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் முஸ்லிம்களது பள்ளிக்குள் உடைத்துக் கொண்டு பாய்ந்தார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களது கலை, கலாசார அம்சங்களில் உட்புகுந்து இம்சைப்படுத்தினார்கள். அந்த விடயங்களை கவனிப்பதற்காகவே இந்த சூறா சபை கூட உருவாகியது என நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் தற்போதைய மைத்திரியின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு 100க்கு 100 வீதம் இவர்கள் உதவினார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது அந்த இருண்ட ஆட்சி முடிந்துவிட்டது. இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும் வாழவும், எவ்வித தடையுமின்றி தமது மதக்கடமைகளை சுதந்திராகமாக முன்னெடுக்க முடியும். அவ்வாறு ஏதும் பிரச்சினைகள் நடைபெற்றால், இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். நாட்டின் வாழும் 4 சமூகங்களும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் இங்கு வாழமுடியும் என்றும் தெரிவித்தார்.



(பட உதவி - ரிப்தி அலி)

Disqus Comments