Wednesday, February 25, 2015

விமல் வீரவங்சவின் மனைவியின் தேசிய அடையாள அட்டை விவகாரம்; ஒழுக்காற்று விசாரணை ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவிக்கு இருவேறுபட்ட இலக்கமுடைய இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
குறித்த இரண்டு அடையாள அட்டைகளும் தயாரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த உத்தியோகத்தர்களை இந்த விசாரணைகளின் மூலம் அடையாளம் காண முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி வெவ்வேறுபட்ட இலக்கமுடைய இரண்டு தேசிய அடையாள அட்டைகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் மற்றும் கடவுச் சீட்டு ஆகியவற்றை போலியான முறையில் தயாரித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் மனைவியான சஷி வீரவங்ச கைதுசெய்யப்பட்டமை குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்றப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
Disqus Comments