போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டுகின்றது.
மொனராகலையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா, இதுதொடர்பில் கருத்து வெளியிட்டார்.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய பதவியில் இருந்த போது, தனது பதவியை பயன்படுத்தி வெலே சுதாவுடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இப்பொழுது அவரை பிடிக்க முடியாது. அவர் தலைமறைவாகியுள்ளார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வேறு பலரது பேரும், குறிப்பிடுப்படுகின்றது. விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த செயற்பாடுகள் மெதுவாகவே இடம்பெறுகின்றன. கஞ்சா பெக்கற்கள் அல்லது பொதிகள் இருந்தால் உடனடியாக கைது செய்கின்றனர். பாபுல் பெக்கற்கள் இருப்பின், ஓடிப்போய் ஆற்றில் குதிக்கும் வரை துரத்துகின்றனர். ஆனால், தொன் கணக்கில் குடு போதைப்பொருள் கொண்டு வந்துள்ள போதிலும், ஆமை வேகத்திலேயே விசாரணைகள் தொடர்கின்றன."
