ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டது.
இவா் கடந்த 2ம் திகதி கொழும்பு பொலிஸாரால் தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக போலியான ஆவனத்தை பத்திரிகையாளா் சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடா்பில் கைது செய்யப்பட்டு இருந்தாா்.
