100 நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என கோரியுள்ள ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லையென தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பது குறித்து கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதையும், கலந்துரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு புதிய மாற்றங்கள் அவசியமில்லையென சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தல் முடிந்த பின் தேசிய அரசாங்கத்தைப் பற்றிப் பேசலாம், அதற்கு முன்னாக அதை அடிப்படையாக வைத்து தேர்தலைப் பின்போட வேண்டிய அவசியமில்லையென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தமது கட்சி தேசிய அரசாங்கத்திலும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
