போலி ஆவனங்களை சமா்ப்பித்து இராஜதந்திர கடவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டதன் விளைவாக சா்ச்சையின் உச்சியில் இருக்கும் முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்சவின் மனைவி அந்தக் கடவுச் சீட்டை செப்படம்பா் 2010 முதல் 6 தடவைகள் பயன்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்சவுக்கு செப்டம்பா் 13ம் திகதி 2010
இராஜதந்திர கடவுச் சீட்டு D3642817 என்னும் இலக்கத்தில், திருமதி ரன்துனு முதியன்சலாகே சேகசா உதயந்தி ரனசிங்க (Randunu Mudiyanselage Shehasha Udayanthi Ranasinghe ) என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
அந்த கடவுச் சீட்டைப் பாவித்து 22 செப்டம்பா் 2010ம் திகதி மலேசியாவின் கோலாலம்பூருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ("UL316") மூலம் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தனது 7 நாட்கள் கொண்ட இரண்டாவது பயணத்தை 10 ஏப்ரல் 2011ல் துபாய் நாட்டுக்கு எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் EK651 மூலம் மேற்கொண்டுள்ளார். அவா் மீண்டும் துபாய் நாட்டுக்கு மூன்றாவது பயணத்தை 21 மே 2011ம் திகதி எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் EK651 மூலம் மேற்கொண்டு இலங்கைக்கு மே மாதம் 24ம் திகதி திருப்பியுள்ளார்.
அதே 2011 ஆக்டோபா் 20யில் இந்தியாவின் மும்பை நகருக்குச் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் EU141 மூலம் சென்று அடுத்த நாள் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த வருடம் 2014ல் அவா்கள் இரு தடவைகள் வெளிநாட்டுச் பயணங்கள் மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஏப்ரல் 14ல் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் EK349 மூலம் சிங்கப்பூருக்கு பிரயாணித்து 17ம் திகதி திருப்பியுள்ளதோடு ஜுன் மாதம் SriLankan airlines flight UL 001 மூலம் இடம் குறிப்பிடப்படாத வெளிநாட்டுச் பயணத்தையும் மேற்கொண்டு 30ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
மேற்படி பயணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அனுப்பப் பட்டிருக்கலாம் என்பதாகவும் நம்பப்படுகின்றது. அதுவே அவா் இராஜதந்திர கடவுச் சீட்டை பயன்படுத்தி மேற்கொண்ட கடைசிப் பயணமாகும்.
இந்த விடயம் தொடா்பாக குடிவரவு மற்றும் ககுடியகல்வுத் திணைக்கள உயா் அதிகாரியை தொடா்பு கொண்டு கேட்ட போது "குடிவரவு மற்றும் குடியகல்வுத் திருத்தச் சட்டம் Act No.20 of 1948 (Amended) படி போலி ஆவனங்களை சமா்ப்பித்து கடவுச் சீட்டைப் பெறுவது பாரதூரமாக குற்றம்” என்றார்.
மே மாதம் 24ம் திகதி 2004 விமல் வீரவன்சவின் மனைவிக்கு சாராரண கடவுச்சீட்டு N1284124 என்ற இலக்கத்தில் ஷீர்ஜா உதயந்தி வீரவன்ச(Sheerja Udayanthi Weerawansa) என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஆங்கிலத்தில் Kevin Kariyawasam - http://www.dailymirror.lk/ தமிழில் MRM. Mujas)
