Sunday, March 8, 2015

18 வயதுக்கு மேற்பட்ட‍ ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ளவேண்டிய பரிசோதனைகள் – ஓர் அலசல்!







18 வயதுக்கு மேற்பட்ட‍ ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ளவேண்டிய பரிசோதனைகள் – ஓர் அலசல்

நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியா த நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட

பெண்களை மட்டும் பாதிப்பதில் லை. இளம் பெண்களும்கூட இந் நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிவதும் , பரிசோதனைசெய்து, சிகிச்சை எடுத்துக்கொள்வதும்தான் இந்த பிரச்சனைகளை எதிர் கொள்ளச் செய்ய வேண்டிய முத ன்மையான விஷயங்களாக உள் ளன. இக்கட்டுரையில் 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதைச் சே ர்ந்த ஒவ்வொரு பெண்ணும் செ ய்து கொள்ள வேண்டிய பரிசோ தனைகளைப் பற்றி கொடுத்துள்ளோம்.

வைட்டமின் டி பரிசோதனை எப்பொழுது: 

எலும்புவலி, முதுகுவலி மற்றும் கால்வலி ஆகிய அறிகுறிகள் இருக் கும்போது, இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது என்கிறார் தேஜாஸ் உபாசினி என்ற எலும்பு மருத்துவ நிபுணர்.










ஏன்:

இது இளம் பெண்கள் செய்து கொள்ள வேண்டிய முக்கி யமான பரிசோதனை யாகும். 80 முதல் 90 சத வீத இளம் பெண்களின் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ள து. எனவே, அனைத்து பெண்களும் அந்தந்த ப ருவத்தில் வைட்டமின் டி பரிசோத னையை செய்து கொள்ள வேண்டியது அவ சியமாகும். முதுமைப் பருவ த்தில் உள்ள பெண்களைத் தாக்கும் எலும்புப்புரைநோய் (Osteoporosis ) அல்ல இது.

எப்படி:

இரத்தப் பரிசோதனை மூலமாக . 

வைட்டமின் பி12 பரிசோதனை எப்பொழுது:

புஜங்கள் மற்றும் கால்களில் உணர்வற்ற நிலையை யோ அல்லது குறுகுறுப்பாகவோ இருக்கும் போதும், பலவீனமா க இருப்பதை உணரும்போதும் மற்றும் அனீமியாவினால் சம நிலையை இழந்திருக்கும் நேரங்களிலும் இந்த பரிசோதனையை செய்வது நலம்.

ஏன்:

இந்த குறைபாடு சைவ உண வு சாப்பிடுபவர்களிடம் காண ப்படுகிறது. இந்த பரிசோத னையை செய்வதன் மூலம் உங்கள் உடலில் வைட்டமின் பி12 எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய முடியும்.


எப்படி:

இரத்தப்பரிசோதனையின் மூல மாக. இப்பரிசோதனைக்கு 10 முத ல் 12மணி நேரத்திற்கு முன்னர் எதையும் சாப்பிட வேண்டாம்.

மார்பகங்களை பரிசோதனை செய்தல் எப்பொழுது:

மார்பகங்களில் கட்டிகள் வருவது ம் மற்றும் ஒழுங்கற்ற தன்மை இரு ப்பதும்தான் பிரச்சனைக்கான முத ல் அறிகுறி. சுயமாக பரிசோதனை செய்யும்போது கட்டிகள் இருப்பது தெரியவந்தால், மாம்மோகிராம்ஸ் பரிசோதனைக ளை செய்து கொள்ள வேண்டியது அவசிய மாகும்.


ஏன்:

இளம்பெண்களால், பெரும்பா லும் தவிர்க்கப்படும் முக்கிய மான பரிசோதனைகளில் ஒன் றாக இது உள்ளது. ஒரு பெண் 25 வயதை அடைந்து விட்டா லேயே இந்த பரிசோதனைகளை செய்துகொள்ள வே ண்டும்.

எப்படி:

சுயமாக பரிசோதனை செய்து கொள்ளு தல். கட்டிகள், வீக்கங்கள் அல்லது மா ர்பகங்களில் அசாதாரண வளர்ச்சி ஆகி யவை உள்ளதா என பரிசோதித்து பார் த்தல்.

சர்க்கரை பரிசோதனை எப்பொழுது: 
தொடர்ந்து தாகமாக இருத்த ல், அடிக்கடி சிறுநீர் கழி க்கத் தூண்டுதல், திடீரென்று அதிக மாக பசி எடுத்தல், தாங்க முடி யாத களைப்பு, மயக்க உணர் வு, பார்வை மங்குதல் மற்றும் குமட்டல் போன்றவை இந்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்று சொல்லும் அறிகுறிகளாகும்.

ஏன்:

இளம் பெண்கள் தங்களுடைய எடையைக் குறைக்கவும் மற் றும் வயிற்றின் தொப்பையை க் குறைக்கவும் போராடி வரும் தருணம் இது. இந்த இரண்டுகாரணங்களுக்காகவே, 20வயதுக் கு மேற்பட்ட பெண்கள் மற்றும் அ தைவிட வயதுகுறைந்த பெண்கள் என அனைவரும் சர்க்கரை பரிசோ தனையை செய்துகொள்ளவேண்டு ம்.

எப்படி:

ரத்த மாதிரியை விரல் நுனி யில் இருந்து எடுத்துக் கொண் டு பரிசோதனை செய்யவேண் டும். இந்த பரிசோதனையின் முடிவுகளை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடி யும்.

பாப் ஸ்மியர் பரிசோதனை எப்போது (Pop smear test) :

அறிகுறிகளுக்காக காத்திருக்கவேண்டா ம். 25 வயதை அடைந்த அனைத்து பெண் களும் செய்துகொள்ள வேண்டிய பரிசோ தனை இது என்பது வல்லுநர்களின் கரு த்தாகும். 65 வயதுக்கும் மேற்பட்ட பெண் கள், கடந்த 10 வருடங்களாக சாதாரண பரிசோதனைகள் செய்துகொள்ளு ம் பெண்கள் மற்றும் கருப்பை இ ல்லாத பெண்கள் (அறுவை சிகிச் சையின் மூலம் கருப்பையை அக ற்றிக் கொண்ட பெண்கள்), ஆகி யோர் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

ஏன்:

பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய் வருவதை தடுக்க இந்த பரி சோதனை செய்யப்படுகிற து.

எப்படி:

இது ஒரு எளிய பரிசோ தனையாகும். உங்களுடைய கருப்பை யில் இருந்து செல்களை சேகரித்துக் கொண்டு, அதனை ஆய்வுக் கூடத்தில் வைத்து பரிசோதித்து முடிவுகளை கொடுப்பார்கள்.

தைராய்டு பரிசோதனை எப்போது: 
எடை அதிகரித்தல், சோம்பல், மாதவிடாய் தவறி வருதல் மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுதல் போன்ற வை இந்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்று காட்டும் அறிகுறிகளாகும்.

ஏன்:

தைராய்டின் அளவு அதிகமாக இருப்பதையோ 
(Hyper- thyroidism) அல்லது குறை வாக இருப்பதையோ (Hypo- thyroidism) பரிசோதிக்கவே இந்த பரிசோதனை செய்யப்ப டுகிறது. இந்த இரண்டு வகை பிரச்சனைகளுமே நமது நகரங்களில் பரவலாக காணப்படுகின்றன. 18வயதை அடைந்த இளம்பெண்கள் அனைவருமே இந்த சீர்கேட்டிற்கான பரி சோதனையை உடனடியாக செய்து கொ ள்ள வேண்டியது அவசியமாகும்.

எப்படி:

இரத்தப் பரிசோதனை மூலமாக,
நன்றி : களத்தூர்
Disqus Comments