Sunday, March 8, 2015

இந்தியாவில் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரம். - அதிர்ச்சித் தகவல்.

நாட்டில் கடந்த 2001ல் இருந்து 2013 வரை நடந்த பாலியல் பலாத்காரங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நாள் ஒன்றுக்கு 57க்கும் அதிகமான பெண்கள் நாட்டில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்கள். இந்த 13 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 2,72,844 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 40,422 வழக்குகள் பதிவாகி உள்ளது. அங்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. டெல்லியில் 8060, தமிழ்நாட்டில் 7875, கர்நாடகாவில் 6204, குஜராத்தில் 4,981 பாலியல் பலாத்கார வழக்குகள் இந்த 13 ஆண்டுகளில் பதிவாகி உள்ளன. 2001ல் 16,075 வழக்குகள் மட்டும் பதிவான நிலையில், 2013ன்போது இந்த எண்ணிக்கை 33,707 ஆக உயர்ந்துள்ளது.


 மாநிலம்    வழக்குகள்    பாலியல் பலாத்காரம் ஒரு நாளைக்கு

மத்திய பிரதேசம்    40,422         8
மேற்கு வங்கம்    22,472          5
உத்தர பிரதேசம்    22,108    4
மகாராஷ்டிரா    21,049    4
ராஜஸ்தான்    19,083    4


2012 வரைக்கும் 1,01,041 பாலியல் பலாத்கார வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

2013ல் இந்த எண்ணிக்கை 1,14,785 ஆக உயர்ந்துள்ளது.


2012ல் மட்டும் 14,717 வழக்குகளில் 3,563 பேர் குற்றவாளிகள் என்றும், 11,154 பேர் நிரபராதிகள் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.



2013ல் 18,833 வழக்குகளில் 5,101 பேர் குற்றவாளிகள் என்றும், 13,735 பேர் நிரபராதிகள் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Disqus Comments