Friday, March 6, 2015

முன்னைய அமைச்சா்கள் பயன்படுத்திய 300 வாகனங்கள் மாயம் - ராஜித சேனாரத்ன

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 300க்கும் அதிகமான வாகனங்கள் மீள ஒப்படைக்கப்படவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு அமைச்சருக்கு இரண்டு வாகனங்களை வைத்திருக்க முடியும் எனினும் கடந்த ஆட்சிக் காலத்தில் சில அமைச்சர்கள் வசம் 20 க்கும் அதிகமான வாகனங்கள் இருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அமைச்சரவை பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

.மேலும், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீதி நிர்மாணப் பணிகள் மூன்றை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மாதாந்தம் 2000 ரூபாய் அடிப்படையில் 10 மாதங்களுக்கு 20,000 ரூபா வழங்கப்படும் எனவும் ராஜித சேனாரத்ன இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.(ரி)

Disqus Comments