மாற்றுத்திறனுள்ள பாடசாலை மாணவர்களுக்காக புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 750 ரூபா புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பீ.ஹரிஷன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் குறைந்தளவான கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், 100 நாள் திட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூவாயிரம் ரூபாவரை கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
