Sunday, March 8, 2015

மஹிந்தவிடம் பணம் பெற்றதன் பலனையே பிரபாகரன் அனுபவித்தார்: ரணில்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு பணம் கொடுத்துத்தான் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் 2009ல் நடந்த நிகழ்வுகளை என்னால் தடுத்திருக்க முடியும். மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியது யார்? தென்னிலங்கை மக்கள் அல்ல. வடபகுதி தமிழ் மக்களை வைத்துப் புலிகளே அவரை ஜனாதிபதியாக்கினர். பணம் பெற்று மஹிந்தவை ஜனாதிபதி யாக்கியதன் பலாபலனை 2009ல் பிரபாகரன் அனுபவித்தார். அத்து டன் தான் மட்டுமல்ல வட பகுதி தமிழ்ச் சமூகமும் அழிவை எதிர்கொள்ள பணமே காரண மாகியது.

சுமார் 3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது குறித்து
ராஜபக்ஷவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார். பணத்தை எடுத்துச் சென்று கொடுத்த எமில் காந்தன் என்பவர் இன்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ இருக்கிறார். இது தெரிந்த விஷயம் தான்.

இதை ராஜபக்ஷ கூட மறுத்தது கிடையாது. பிரபாகரன் பணத்தைப் பெற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களைக் கடத்தியவர்களைத் தான் இலங்கை கடற்பரப்பில் வைத்து எமது கடற்படை சுட்டுக்கொன்றுள்ளதே தவிர அப்பாவி மீனவர்களை எமது கடற்படை எத்தருணத்திலும் தாக்கவில்லை எனவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார். எங்களது கடற்பகுதிக்கு தமிழக மீனவர்கள் ஏன் வரவேண்டும்? எங்கள் கடற்பரப்பை ஆக்கிரமித்தால் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களை விரட்டியடிக்க எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
கூறியுள்ளார்.
(நன்றி : SONAKAR.COM)
Disqus Comments