கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வென்றிருந்தால் இந்நேரம் தான் சிறையில் வாட நேர்ந்திருக்கும் என தெரிவித்துள்ளார் அதுராலியே ரதன தேரர்.
பொது வேட்பாளர் விவகாரத்தை சோபித தேரர் முன்னெடுத்த போது அவருக்குத் துணையாக ஜாதிக ஹெல உறுமய இணைந்து கொண்டதோடு மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தது. தேர்தல் நேரத்தில் முகா கரையோர மாவட்ட கோரிக்கையை முன்வைத்துப் பேரம் பேசியதாக வெளியான செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் தெளிவு படுத்தியதில் ஜாதிக ஹெல உறுமய பெரும் பங்கு வகித்திருந்தமையை மு.கா செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி முஸ்லிம் குரல் வானொலியில் தெளிவுபடுத்தியிருந்தார்.
மைத்ரியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்திருந்த தம்மை மஹிந்த நிச்சயமாக சிறையிலடைத்திருப்பார் என தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி : http://www.sonakar.com/?p=47589)
