Monday, March 9, 2015

சீகிரியா ஓவியத்தில் பெயர் எழுதிய தமிழ் யுவதிக்குப் பொது மன்னிப்பு வழங்குங்கள்

சீகிரியா ஓவியத்தில் பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த யுவதியை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கடந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான டாக்டர் ஐ. எம். இல்லியாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் டாக்டர் இல்லியாஸ் தெரிவித்திருப்பதாவது,

மட்டக்களப்பில் வசிக்கும் உதயா என்ற யுவதி கடந்த பெப்ரவரி மாதம் தனது நண்பிகளுடன் சிகிரியாவுக்குச் சுற்றுளா சென்ற வேளை சீகிரியாவில் உள்ள சரித்திர பிரசித்தி பெற்ற ஓவியத்தின் பக்கத்தில் தனது பெயரை எழுதியதால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அச்சிறுமிக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் யுவதி தெரியமாலேயே இந்தத் தவறைச் செய்துள்ளார். இதே தவறை இதற்கு முன்னரும் பலர் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் சிறிய தண்டனைகள் மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஏழைச் சிறுமியும் விடுவிக்கப்பட வேண்டும். உங்களது நல்லாட்சியில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இந்த யுவதி  வழிவாங்கப்படக் கூடாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.

எனவே மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த காலப்பகுதியில் இந்த யுவதிக்குப் பொது மன்னிப்பு  வழங்குவதன் மூலம் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் மனங்களில் புறையோடிப் போயுள்ள அந்த ரணங்களை மாற்றுவதற்கு இது உதவும் என நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Disqus Comments