Monday, March 9, 2015

இலங்கையில் கொள்ளையடிக்கபட்ட பணம் சுவிஸ் மற்றும் சவூதி அரேபிய வங்கிகளில் -

 இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து மோசடி செய்யப்பட்டு சுவிஸ்லாந்து மற்றும் சவூதி அரேபிய வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள  பணம் தொடா்பாக தகுதிவாய்ந்த அதிகாரிகளால் விசாரனணகள் நடாத்தப்பட வேண்டும் என   நீதி பிரதியமைச்சார் சுஜுவ சேனசிங்க இன்று மெரட்டுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் உரையில் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ அவா்களின் முன்னைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மத்தளை விமான நிலையம், அம்மாந்தோட்டை துறைமுகம், மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் போன்ற  போன்ற அபிவிருத்தித் திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட பணங்கள் சுவிஸ்லாந்து மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளின்  வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 

முன்னை அரசாங்க உறுப்பினா்கள் தொடா்பில் இதுவரையில் இலஞ்ச ஊழல், ஆணைக்குழுவிற்கு 2000 வரையான  முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் முன்னைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் மோசடிக்காரா்களால் நிரம்பிக் காணப்பட்டதாகவும் இன்று  முன்னைய நாள் போன்று மோசடிகளில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதாகவும் தனதுரையில் தெரிவித்தார்.

மேலும் அவா் அங்கு பேசும் போது குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிற்கு புதிய தலைவரை நியமனம் செய்துள்ளதோடு புதிய கண்காணிப்பு உத்தியோகத்தவா்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பிரதி நிதியமைச்சரின் கூற்றுப் படிப் படி பார்க்கும் போது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய மோசடியில் ஈடுபட்ட அரைவரையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர 6 மாதம் முதல் ஒரு வருட காலம் வரை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Disqus Comments