ஓய்வூபெற்றவர்களுக்கான புதிய இலத்திரனியல் அடையாள அட்டை தயாரிக்கும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதத்திலிருந்து இந்த புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்கவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்றவர்களின் அனைத்து தகவல்களும் புதிய இலத்திரனியல் அடையாள அட்டையில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாவும் அதனூடாக கொடுக்கல் வாங்கள்களை மேற்கொள்ள முடியும் எனவும் அதேபோல் அனைத்து கட்டணங்களையும் வங்கிகளினூடாக செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த அட்டையை பாவிக்கும் ஓய்வூதியரின் சுகாதாரம் தொடர்பான தகவல்களையும் உள்ளடக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார்.
