-ஜஹங்கீர்- வெள்ளை வேன் கட்டளைத் தளபதியாக கோட்டாபே ராஜபக்ஷவே இருந்தார். மேலும் கடந்த காலங்களில் தான் ஊடகத்துறைகளின் மீது நடத்திய தாக்குதல் எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை - கொந்தரத்து அதனையே நான் நிறைவேற்றினேன். ஆனால் எனக்குக் கட்டளை பிறப்பித்தவர்கள் யார் என்பதனை நான் ஒருபோதும் சொல்லப்போவதில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் இல்லாமல் செய்தமைக்கு அவருடைய சகோதரர்களான பசிலும் ,கோட்டாவுமே பொறுப்பாளிகள். இப்படி அதிரடியாக கூறி இருக்கின்றார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
