Monday, April 6, 2015

நாளை முதல் உள்நாட்டு அழைப்புகளுக்கு 25% கட்டண தள்ளுபடி

ஸ்ரீ லங்காவில் கையடக்கத் தொலைபேசி முற்கொடுப்பனவு  (Prepaid) வாடிக்கையாளா்களுக்கு நாளை முதல் 25%  கட்டணக் குறைப்பு சலுகையை அனுபவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சகல உள்நாட்டு அழைப்புகளிற்கு 25% கழிவு வழங்கப்படும் என்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புதிய அரசாங்கத்தினால் அண்மையில் சமா்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டதற்கமைய இந்த சலுகை நாளை முதல் அமூலுக்கு வருகின்றது.  

எவ்வாறாயினும் பிற்கொடுப்பனவு (Postpaid) வாடிக்கையாளா்களின் அழைப்புக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை என்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Disqus Comments