இந்தியாவில் 4.12 கோடி ஆண்கள் திருமணம் செய்ய பெண் இன்றி தனிமையில் வாழ்வதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்தியாவில் ஆண்களை விட மிக குறைந்த அளவே பெண்கள் உள்ளனர்.
நாட்டில் உள்ள 6.50 கோடி திருமணமாகாத ஆண்களுக்கு 2.38 கோடி மணப்பெண்களே உள்ளனர். அதனால் 5இல் ஒரு ஆண் வேறு வழியின்றி திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1970கள், 80கள் மற்றும் 90களில் கோடிக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் ஆண், பெண் சரிவிகிதம் சமமாக இல்லை என்று கூறப்படுகிறது.