நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது பலூன் தொண்டையில் சிக்கியதில் ஆறு வயதான சிறுவன் பலியாகியுள்ளான். இந்த சம்பவம். ஹபராதுவ, ஹருமாலகொட எனுமிடத்திலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஊதி கொண்டிருந்த பலூன் வெடித்து தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து மகனை, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தோம். எனினும், அவரை காப்பாற்ற முடியவில்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.