(எம்.எஸ்.முஸப்பிர்) சிறுவர்களிடத்தில் பணக் கொடுக்கல் வாங்கல் விடயங்களை பழக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கில் புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் சிறுவர் சந்தை கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் என்.எம்.நஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் கல்வி அதிகாரிகள் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். இச்சிறுவர் சந்தையில் பாடசாலை மாணவர்களது ஏராளமான விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
(Thanks to Abdul Fareed for PHOTOS)