புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 50,000 ரூபாய் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞா் அணித் தலைவரான MIM. ஆசிக் என்பவரே இந்நிதியை அன்பளிப்புச் செய்துள்ளார்.
பாடசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவா்த்தி செய்து கொள்வதற்காக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே MIM. ஆசிக் இந்நிதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.