Wednesday, April 22, 2015

பொருந்தோட்ட ஆசிரியா் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு தொடா்பான கலந்துரையாடல்.

தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனம் தொடர்பாக விசேடக் குழு கல்வி அமைச்சரை சந்தித்தது.
பெருந்தோட்டப் பகுதியிலுள்ள 11 மாவட்டங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014.08.08 வர்த்தமானி அறிவித்தலின் படி 3024 ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடத்திய போட்டிப் பரிட்சையில் தோற்றிய முஸ்லிம்களை புறக்கணித்து நியமனத்தை தமிழர்களுக்கு மட்டும் வழங்குவதற்கு கல்வி அமைச்சு முடிவடுத்து இருந்தது.

இது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாத் பதீயுத்தீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்க ல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹகீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை.எல். எஸ். ஹமீத் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் முஹ்ளிஸ் வஹாப்தீன், மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் எம். எஸ். எம். முஸ் ச மில் உள்ளிட்ட குழுவினர் நேற்று (21.04.2015) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசதுடன் கல்வி அமைச்சில் சந்தித்து ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அமைச்சரிடம் எடுத்து விளக்கினர். அதனைத்தொடர்ந்து அதற்குரிய விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்று மிக விரைவில் சமர்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உறுதியளித்தார்.
Disqus Comments