Monday, November 23, 2015

ACMCயின் செயலாளா் றிஷாத் பத்தியுத்தீனை நேரடி தொலைக்காட்சி நிகழ்சிக்கு வருமாறு சவால்!!!

அண்மைக்காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவா் மற்றும் செயலாளா்களுக்கு இடையில் பனிப் போர் நடந்து வருவதாக அறிய முடிந்தது. ஆனால் இரு தரப்பும் உத்தியோக பூா்வமாக  தங்களது சார்பான கருத்துக்களைத் வெளிப்படுத்தவில்லை. 

ஆனால் நேற்று  22.11.2015ம் ஆண்டு நேத்ரா தொலைக்காட்சியின் அதிா்வு நிகழ்ச்சியில் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவா் றிஷாத் பத்தியுத்தீன் அவா்கள் கலந்து கொண்டதன் பின்னா் கட்சியின் செயலாளா் YLM. ஹமீத் அவா்கள் பின்வருமாறு சவால் விட்டுள்ளார்கள்.

தேர்தல் நடைபெற்றத்தில் இருந்து இன்றுவரை கட்சிக்குள் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக முடிந்த அளவு அமைதியாகவே இருந்து வருகின்றேன் . ஆனால் இன்று இரவு (22/11/2015) இல் நடைபெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் முழுமையான உண்மைகளை மறைத்து நடந்த விடயங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி எடுத்து உண்மை என்ற ஒன்று இருந்தால் அது தனக்கு சாதகமாகவே இருக்க வேண்டுமென்பது போல அவருடைய வழமையான பாணியில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் கதை கூறினார்.

உண்மையில் அவருக்கு நான் நன்றி கூற வேண்டும். ஏனெனில் இதுவரை , ஊடகங்கள் எதை எதையோ எழுதியம் , என்னிடம் பேட்டிகள், கருத்துக்கள் கேட்டும் முடிந்த அளவு மௌனம் காத்த எனக்கு மக்களுக்கு உண்மையை உரத்துக் கூறுவதற்கு குறித்த நிகழ்ச்சியில் அவர் உதிர்த்த கருத்துக் கனிகள் எனக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அல்லாவுக்கே எல்லாப் புகழும். எனவே இன்சா அல்லா, இனி உண்மைகளை எதிர் பாருங்கள். அதே நேரம் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் ஒரு நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியிற்கு என்னுடன் கலந்து கொள்ள முன்வருவாராக இருந்தால் மக்களுக்கு உண்மையை உணர்ந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும் .இது ஒரு சவால் என்பதை விட ஒரு நியாயமான வேண்டுகோள் மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக .


அதே நேரம் உண்மைகள் வெளிவருகின்றபோது கூலிக்கு எழுதுபவர்கள் சேறு பேசுவதற்கு தங்கள் பேனாக்களைக் கூர்மைப் படுத்த உத்தரவிடப் படலாம் வழமையான பாணியில் . ஆனால் அதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை .
Allahu Akbar.

கட்சியின் செயலாளா் அவா்கள் மேற்படி பதிவைப் பார்க்கும் போது இப்போது கூட கட்சிக்குள் பிளவு இருப்பது உண்மையாகியுள்ளது. அதே போன்று எதிா்காலத்தில் கட்சி பிளவடையும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது உறுதி. 
Disqus Comments