(ADADERANA TAMIL) பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் மஸ்கெலிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலிய பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் 11ம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதான மாணவி எனத் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த ஆசிரியர் மாணவியை தனது வீட்டில் வைத்தே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, சிறுமியின் பெற்றோர் இன்று மஸ்கெலிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்தே, இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரை நாளை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மஸ்கெலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
