Monday, January 25, 2016

STCயின் Coordinating Director ஆக ஆப்தீன் எஹியா அமைச்சா் றிஷாத் அவா்களால் நியமனம்.

வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினா் ஆப்தீன் எஹியா அவா்கள் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் (STC) Coordinating Director ஆக ஆப்தீன் எஹியா அவா்கள் பாராளுமன்ற உறுப்பினரும் வணிக மற்றும் வானிபத்துறை அமைச்சருமான றிஷாத் பத்தியுத்தீன் அவா்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னால்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட இணைப்பாளராக இருந்த ஆப்தீன் எஹியா அவா்கள் அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோக பூா்வமாக இணைந்து கொண்டார்.

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் (STC) தலைவராக (Director) முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பபினா் A.M.ஜெமீல் அவா்கள் நியமிக்கப்பட்டு இருந்தார். மேற்படி Director அவா்களின் இணைப்பாளராக ஆப்தீன் எஹியா அவா்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் (STC) Coordinating Director  பதவிக்கான நியமனக் கடிதத்தை அமைச்சா் அவா்களிடமிருந்து பெற்றுக் கொள்வதையும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் (STC)யின் Director A.M.ஜெமீல் அவா்கள் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.
நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட போது.

 
நியமனக் கடிதம்.
Disqus Comments