மாஷா அல்லாஹ் , ஹனான் அல் ஹுரூப் எனும் பலஸ்தீன் ஆசிரியை உலகில் அதிசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
பலஸ்தீனில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுடன் யுத்தம் நடை பெற்ற பொழுதிலும் அங்குள்ள மக்கள் கல்வியில் சாதனை படைத்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . அண்மையில் பல பெண் வைத்தியர்கள் பட்டம் பெற்று வெளியேறியதோடு மட்டுமன்றி அங்கு அநேக மாணவ மாணவிகள் அல் குர்ஆனைத் திறம்பட மனனம் செய்து வருகின்றனர் . யுத்தம் , ஆக்கிரமிப்பு , பொருளாதார கஷ்டங்கள் போன்ற பிரச்சினைகளிலும் தாம் சாதிப்பதில் வல்லவர்கள் என்பதை உலகுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர் இந்த பலஸ்தீன் மக்கள் .
இவ்வாறு சாதனைக்கு சொந்தக்காரியாக மாறியவரே ஆசிரியை ஹனான் அல் ஹுருப் என்பவர் .
யா அல்லாஹ் ! இவர்களது தியாகங்களையும் முயற்சிகளையும் ஏற்றுக் கொள்வதோடு வெகு சீக்கிரத்தில் இவர்களுக்கு நாசகார இஸ்ரேலிடமிருந்து விடிவையும் ஏற்படுத்துவாயாகா ! ஆமீன்
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
14/03/2016
Preview attachment IMG_41910186597394.jpeg