Saturday, March 26, 2016

கிரிஸ்மேன் பிரச்சினையே முஸ்லிம்களை எம்மிடமிருந்து தூரமாக்கிய முதல் காரணி - பஷில் ராஜபக்ஷ

எமது ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் மக்கள் சந்­தே­கப்­ப­டு­கின்ற வகையில் பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. அவ்­வா­றான சம­யங்­களில் நாம் சற்று அக்­க­றை­யுடன் செயற்­பட்­டி­ருக்­கலாம் என்­பதை ஏற்றுக் கொள்­கின்றேன் என முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சரும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சகோ­த­ர­ரு­மான பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர்  இதனைக் குறிப்­பிட்டார். அதில் அவர் மேலும் தெரி­விக்­கையில் ,

முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­கவே நாங்கள் முயற்­சித்தோம். ஆனால் நாங்கள் தீர்த்த பிரச்­சி­னை­களும்  தற்­போது மீண்டும் குழம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றன. அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் நேர்­மை­யான முறையில்   தமது மக்­க­ளுக்­காக செயற்­பட்டு வந்தார்.  ஆனால்  அப்­போ­தைய  மன்னார் ஆயர்  அதற்கு  இடை­யூ­றாக இருந்து வந்தார்.

பல கவ­லை­யான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன.  அந்த மக்கள் அதி­க­ளவில் ஐ.தே.க  ஆட்சிக் காலத்­தில கஷ்­டப்­பட்­டனர். புலி­க­ளி­னாலும் கஷ்­டங்­களை எதிர்­கொண்­டனர். முஸ்லிம் நாடு­க­ளுடன் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு சிறந்த தொடர்­புகள் காணப்­பட்­டன. இந்த நாட்­டி­லுள்ள முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு வழங்­கினர்.

எமது காலத்தில் பிர­தான முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் எம்­முடன் இருந்­தனர். ஆனால் சில அமைப்­புக்கள் உரு­வா­கி­ய­துடன் முஸ்லிம் மக்­க­ளுக்கு இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­டு­வதை நான் எதிர்க்­க­வில்லை. ஆனால் அந்த அமைப்­புக்­களின் ஒரு­சில செயற்­பா­டு­களை நாங்கள் எதிர்க்­கின்றோம்.

மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அவற்றை எதிர்த்தார். அந்த அமைப்­புக்கள் செய்த சில நட­வ­டிக்­கைகள் முஸ்லிம் மக்கள் மத்­தியில் பாரிய பிரச்­சி­னை­க­ளாக உரு­வெ­டுத்­தன. அவற்­றிற்கு ஊட­கங்­களும் தேவை­யற்ற பிர­சித்­தங்­களை வழங்­கின.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்கள் இடம்­பெற்ற விட­யத்தில் பாரிய குறை­பா­டுகள் இருந்­தன என்­பதை ஏற்றுக் கொள்­கின்றேன். முஸ்லிம் மக்கள் சந்­தே­கப்­ப­டு­கின்ற வகையில் பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன.  கிரீஸ் பேய் சம்­ப­வங்­களும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வை­யென காட்­டப்­பட்­டன. நாம் சற்று அக்­க­றை­யுடன் செயற்­பட்­டி­ருக்­கலாம் என ஏற்றுக் கொள்­கின்றேன்.

இன்று அர­சாங்­கத்­தி­லி­ருக்­கின்ற சிலர் அன்று எமது பக்­கத்­தி­லி­ருந்து கொண்டு சில நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்கு இட­ம­ளிக்­க­வில்லை. மஹிந்த ராஜ­பக்ஷ 290 பள்­ளி­வா­சல்­களை மீண்டும் திறந்து வைத்தார்.

பல பள்­ளி­வா­சல்­களை மறு­சீ­ர­மைப்பு செய்தார். கூர­கல பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தை நிவர்த்தி செய்ய நாம் முயற்­சித்தோம். ஆனால் அவ்­வா­றான சம்­பவங்­களில் முஸ்லிம் மக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர்.

ஆனால் முஸ்லிம் மக்களின் உண்மையான பிரச்சினையை தீர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எனினும் தவறான பிரச்சாரங்கள் காரணமாக நிலைமை மாற்றமடைந்தது என்றும் பஷில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்
Disqus Comments